ஈராக் நாட்டில் புரட்சிப்படையின் கை ஓங்குகிறது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், சூன் 16, 2014

ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியான ஈராக் நாட்டில் ஆளும் சியா முஸ்லிம்களின் ஆட்சிக்கு எதிராக முன்னால் அதிபர் சதாம் உசேனின் சன்னி பிரிவு ஆதரவுப்படைகளின் புரட்சி கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன்ட் தி லெவன்ட் (ஐஎஸ்ஐஎல்) என்ற புரட்சி படையானது சில நகரங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜூன் 16ஆம் தேதி கணக்குப்படி வடக்கு பிராந்திய முக்கிய நகரான தல் அஃபாரை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரின் இரண்டு லட்சம் மக்கள் வாழுகிறார்கள். இதில் அதிகப்படியாக ஜியா முஸ்லீம்கள், மற்றும் சன்னி டர்கோமென் பிரிவைச்சேர்ந்த மக்கள் வாழுகிறார்கள். இந்த தாக்குதல்களினால் ஜியா பிரிவு தலைவரான பிரதமர் நூரி அல் மாலிக் அரசிற்க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சன்னி முஸ்லீம்களின் படை பிடித்துள்ள நகர மக்கள் குர்திஸ் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.


மூலம்[தொகு]