உகாண்டா பள்ளி ஒன்றில் மின்னல் தாக்கியதில் 18 சிறுவர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து

புதன், சூன் 29, 2011

உகாண்டாவின் மேற்கில் ஆரம்பப் பள்ளி ஒன்றை மின்னல் தாக்கியதில் 18 சிறுவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மின்னல் தாக்குதல்

செவ்வாய் அன்று ருனியாயா ஆரம்பப் பள்ளியில் மாலை 4:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 15 சிறுமிகளும், மூன்று சிறுவர்களும் இறந்ததாக காவல்துறை அதிகாரி ஏஎஃப்பி செய்தியாளருக்குத் தெரிவித்தார். மேலும் 36 பேர் எரி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அண்மையில் இவ்வாறான மின்னல் தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பியுள்ளனர். கடந்த வாரம் மட்டும் உகாண்டாவில் 28 பேர் மின்னல் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.


பொதுக் கட்டடங்களில் மின்னல் கடத்திகள் இணைக்கப்படாமையே இந்த இறப்புகளுக்குக் காரணம் என வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.


மூலம்[தொகு]