உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவில் வீழ்ந்த எரிவிண்மீன் சூரியக் குடும்பத்தின் வயதை ஒத்ததாக அறிவியலாளர்கள் கருத்து

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 5, 2013

உருசிய நகரின் மீது கடந்த பெப்ரவரி மாதத்தில் வெடித்த எரிவிண்மீன் 4.56 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இவ்வயது நமது சூரியக் குடும்பத்தின் வயதை ஒத்ததாகும்.


காணொளி

கதிரியக்க ஓரிடத்தான்கள், மற்றும் அவற்றின் தேய்வடைந்த உபபொருட்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த எரிவிண்மீன்களின் வயதைக் கண்டறிந்ததாக வெர்னாத்ஸ்கி நில இயற்பியல் கல்விக் கழகத்தைச் சேர்ந்த மிக்கைல் மாரொவ் கூறினார்.


இந்த எரிவிண்மீன் மிகப் பெரும் வான்பொருள் ஒன்றின் ஒரு சிறு பகுதி என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இவ்வாண்டு பெப்ரவரி 15 இல் உருசியாவின் மத்திய ஊரல் மலைப் பிரதேசமான செல்யாபின்ஸ்க் நகரில் இந்த எரிவிண்மீன் வெடித்தது. இது ஏறத்தாழ 10,000 மெட்ரிக் தொன் எடையும், 15 மீட்டர் விட்டமும் கொண்டது. இவ்விபத்தில் சுமார் 1,500 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் அவர்களின் இருப்பிடங்களில் தாக்கத்தினால் சேதமடைந்த கண்ணாடித் துண்டுகளினால் தாக்கப்பட்டே காயமடைந்தனர்.


இந்த விண்கல் பெரும்பாலும் பாறைகளினால் ஆன ஒரு சாதாரண வேதிஎரிகல் (chondrite) என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]