உள்ளடக்கத்துக்குச் செல்

உலகின் இரண்டாவது குளோனிங் ஓட்டகம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 4, 2010

உலகின் இரண்டாவது படியெடுப்பு (குளோனிங்) ஓட்டகம் துபாயில் பிறந்திருப்பதாக அங்குள்ள ஓட்டக இனப்பெருக்கம் மையம் அறிவித்துள்ளது.


இதன் பெயர் பின் சவுகான் என்பதாகும். இது பெப்ரவரி மாதம் 23 இல் பிறந்திருக்கிறது. இவ்வொட்டகம் எருது ஒன்றின் தோலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உயிரணுவில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. வாழும் உயிரினம் ஒன்றின் உயிரணுவில் இருந்து படியெடுக்கப்பட்ட முதலாவது ஒட்டகம் இதுவாகும்.


உலகின் முதல் ஓட்டகமும் துபாயில் தான் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இப்பொழுது ஓரு வயதாகிறது. அதன் பெயர் இன்ஜாஸ். இது இறைச்சிக்காகக் கொல்லப்பட்ட ஒரு ஒட்டகத்தின் உயிரணுவில் இருந்து உருவாக்கப்பட்டிருந்தது.

மூலம்

[தொகு]