ஐக்கிய அரபு அமீரகத்தில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 29, 2010

பாகிஸ்தானிய நபர் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜாவில் உள்ள ஒரு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


ஐக்கிய அரபு அமீரகம்

சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்தோருக்கிடையில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.


கடந்த ஆண்டு சனவரியில் பாகிஸ்தானிய நபர் கத்தியால் பலமுறை குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் கிட்டத்தட்ட 50 பேர் தொடர்புபட்டிருந்தனர். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் 17 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.


அமீரகத்தில் மதுபானம் விற்பதற்கு தடை உள்ளது. சட்டவிரோத மதுபான விற்பனையினால் அங்கு அடிக்கடி வன்முறைகள் இடம்பெறுவதுண்டு.


அமீரகத்தில் ஒரே தடவையில் அதிகளவு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது இதுவே முதற் தடவை எனக் கூறப்படுகிறது.

மூலம்[தொகு]