ஐ-போன் 6 மற்றும் சாம்சங் காலக்சி நோட் 4 வெளியிடப்பட்டுள்ளது
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
- 20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 2 சனவரி 2018: சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன
- 17 பெப்பிரவரி 2017: சாம்சங் குழும அதிபர் ஊழல் குற்றச்சாட்டில் கைதானார்
வியாழன், செப்டெம்பர் 11, 2014
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ-போன் 6 மற்றும் சாம்சங் காலக்சி நோட் 4 ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் ஆப்பிளின் சிறப்பு நிகழ்வில் ஐ-போன் 6 மற்றும் ஐ-போன் 6 பிளசு ஆகியவை செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்டன. ஐ-வாட்ச் என்பதும் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆனால் அது 2015ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் காலக்சி நோட்-4 செப்டம்பர் 4 அன்று ஐரோப்பாவிலுள்ள மின்னணு பொருட்களின் முதன்மைக் கண்காட்சி/சந்தையான பன்னாட்டு வானொலிக் காட்சியகத்தில் (IFA) வெளியிடப்பட்டது. பன்னாட்டு வானொலிக் காட்சியகம் யேர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ளது. யேர்மன் விற்பனையாளர்கள் இதற்கான முன்பதிவை தொடங்கிவிட்டார்கள்.
இதன் இயக்கு தளம் ஆண்ட்ராய்டு 4.4, டச்விச் ஆகும். இது குவால்காம் சினாப்டிராகன் 805, 2.7 ஜிகாஹெர்ஸ் உடைய குவாட்-கோர், 1.9 ஜிகாஹெர்ஸ் உடைய சைனாசு குவாட்-கோர் ஆகிய செயலிகளைப் பயன்படுத்துகிறது.
ஐ-போன் 6 மற்றும் ஐ-போன் 6 பிளசு ஆகியவை ஆப்பிளின் புதிய இயக்கு தளமான ஐஓஎசு8 என்பதனை பயன்படுத்தவுள்ளன. இரண்டு ஐ-போன்களும் ஆப்பிளின் 64-பிட்ட் ஏ8 சில்லையும் (chip) எம்-8 (M8) அடுத்த தலைமுறை அசை செயலியையும் (processor) பயன்படுத்துகின்றன. கூடுதலான செயலியினால் இதன் ஆற்றல் தொடக்ககால ஐ-போனைவிட 84 மடங்கு விரைவாக இருக்கும்.
இப்போன் அமெரிக்காவில் செப்டம்பர் 19 முதல் கிடைக்கும். செப்டம்பர் 12 முதல் முன்பதிவு செய்யப்படும். இதிலிலிருந்து தொலைபேசி அழைப்புகளை கம்பியில்லா அகலப்பட்டை இணைப்பு மூலம் மேற்கொள்ளலாம் என்றும் செல்பேசியின் வலைப்பின்னல் அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- Apple Officially Announces iPhone 6 ஹவ்விங்டன் போசுட்
- iPhone 6 Plus vs Samsung Galaxy Note 4 – Clash of the Titans லோட் த கேம்
- Apple Watch: Everything You Need to Know கிஷ்மோடோ செப்டம்பர் 9, 2014
- Samsung Galaxy Note 4 and Note Edge German pre-orders launch ஜிஎசுஎம்அரினா செப்டம்பர் 11, 2014
- Apple iPhone 6 Plus vs Samsung Galaxy Note 4: The phablet war gets hotter டெக் பர்சுட்போசுட் செப்டம்பர் 11, 2014