கம்பியில்லா மின்னேற்றி கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், ஏப்ரல் 23, 2014

கொரியா நாட்டின் அணு மற்றும் குவாண்டம் பொறியியல் பேராசிரியர் சுன் டி ரிம் என்பவர் ஐந்து மீட்டர் தூரத்திலிருந்து கம்பியில்லாமலே மின்னேற்றம் செய்ய உதவும் இருதுருவ சுருள் ஒத்ததிர்வு கணினி (Dipole Coil Resonant System (DCRS)) என்ற உபகரணம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.


இந்த வகையான இருதுருவ சுருள் ஒத்ததிர்வு கணினி எல்லா அலுவலகங்களிலும் அமைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த உபகரணம் கொண்டு ஒரே நேரத்தில் 40 கைபேசிகளை கம்பியில்லாமலே மின்னேற்றம் செய்யலாம். பெரிய திரை கொண்ட தொலைக்காட்சியைக் கூட இந்த உபகரணம் கொண்டு இயக்கும் அளவு சக்தியைக்கொண்டது. இந்த உபகரணத்தை வீட்டிலோ, அலுவலகத்திலோ சிறிய அறையில் அமைக்கலாம் என்று இதனைக் கண்டுபிடித்தவர் தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg