உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கோ விமான விபத்தில் அரசுத்தலைவர் கபிலாவின் மூத்த ஆலோசகர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 13, 2012

மேற்கு ஆப்பிரிக்க நாடான கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் நிகழ்ந்த விமான விபத்து ஒன்றில் அரசுத்தலைவர் யோசப் கபிலாவின் மூத்த ஆலோசகர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தனியார் ஜெட் விமானம் புக்காவு நகரில் தரையிறங்கும் போது விபத்துக்குளாகி வீழ்ந்ததில் அகுஸ்டின் கட்டும்பா முவான்கே, மற்றும் விமானி ஆகியோர் கொல்லப்பட்டனர். நாட்டின் நிதி அமைச்சர் மட்டாட்டோ மாப்போ மற்றும் மாகாண ஆளுனர் ஆகியோர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள்.


"முவான்கேயின் இறப்பு நாட்டிற்கு ஒரு பேரிழப்பு," என அரசுப் பேச்சாளர் கூறினார்.


கடந்த ஆண்டு சூலை மாதத்தில் நாட்டின் வடக்கே 112 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரலில், தலைநகர் கின்சாசாவில் ஐக்கிய நாடுகளின் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்

[தொகு]