உள்ளடக்கத்துக்குச் செல்

கொர்பச்சோவிற்கு இரசியாவின் அதி உயர் விருது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 3, 2011

முன்னாள் சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு இரசியாவின் அதி உயர் விருது, புனித அண்ட்ரூஸ் விருது, அவரது 80வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


மிக்கைல் கொர்பச்சோவ்

"நாட்டின் தலைவராக இருந்து ஆற்றிய பெரும் பணிக்காக" இவ்விருது வழங்கப்படுவதாக இரசியாவின் அரசுத்தலைவர் மெத்வேதெவ் தெரிவித்துள்ளார். தலைநகர் மாஸ்கோவுக்கு அருகில் உள்ள அரசுத்தலைவர் மாளிகையில் அவர் கொர்பச்சோவைச் சந்தித்தார்.


பனிப்போர்க் காலத்தில் இருந்த இரும்புத்திரையை விலக்க கொர்பச்சோவின் பப்க்கு முக்கியமானதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். ஆனாலும் 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து உருவான பொருளாதார நெருக்கடிகளுக்கும் குழப்பங்களுக்கும் பெரும்பாலான உருசியர்கள் இவரையே குற்றம் சாட்டுகின்றனர்.


கடந்த வாரம் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றில் 52% உருசியர்கள் கொர்பச்சோவ் இரசியாவுக்கு நல்லதை விடக் கெடுதலையே அதிகம் செய்துள்ளார் எனக் கூறியுள்ளனர். 11% வீதமானோர் மட்டுமே அவரை ஆதரித்துக் கருத்துக் கூறியிருந்தனர்.


1991 டிசமபர் 25 ஆம் நாள் சோவியத் அரசுத்தலைவர் படஹ்வியில் இருந்து விலகிய பின்னர் கொர்பச்சோவ் பொதுவாக உள்நாட்டு அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டாதவராகவே இருந்து வந்துள்ளார். ஆனாலும் நேற்று புதன்கிழமை உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் பிரதமர் விளாதிமிர் பூட்டினை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.


மூன்றாவது தடவையாகவும் இரசிய அதிபராக பூட்டின் போட்டியிட முடிவு செய்ததை அவர் குறை கூறியுள்ளார். அரபு நாடுகளில் தற்போது இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சி போன்ற ஒன்றுக்கு இது வழிவகுக்கும் என அவர் எச்சரித்தார்.


இரசியப் புரட்சிக்கு முன் வழங்கப்பட்டு வந்த சென் அண்ட்ரூஸ் விருது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.


மூலம்[தொகு]