சனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இலங்கையில் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 12, 2010

வரும் ஜனவரி 26ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று 4000 நிலையங்களில் ஆரம்பமாகியது. வரும் புதன் கிழமை வரை தபால் மூல வாக்கெடுப்பு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சுமார் 401,119 வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக இம்முறை தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர். தேர்தல் செயலகம் கருத்து தெரிவிக்கையில் சுமார் 458,154 விண்ணப்பங்கள் கிடைத்த போதும் 57,036 விண்ணப்பங்களை நிராகரித்ததாகவும் அறிவித்தார். நிராகரித்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப படிவங்கள் சரியாக நிரப்பபடாமையே இதற்கு காரணமாகும்.


தேர்தல் ஆணையாளர் கருத்து தெரிவிக்கையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வாக்களிப்பு சுமூகமாக நடைபெற வழி சமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.


பெப்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் ஆகியவற்றிற்கு தேர்தலைக் கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் உறுதிப் படுத்தினார்.


மூலம்[தொகு]