சனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், சனவரி 12, 2010

இலங்கை சனாதிபதி தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் சென்ற ஊர்தியின் மீது இனம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணம் அடைந்துள்ளதுடன், பத்து ஆதரவாளர்கள் காயங்களுக்கு உள்ளாகினர் என்று பொன்சேகாவின் ஊடகதொடர்பாளர் அறிவித்துள்ளார்.


துப்பாக்கிச் சூட்டை உறுதிப்படுத்திய பொலீசார் உந்துருளியில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நோக்கம் தமக்கும் தெளிவில்லாமல் உள்ளதாகத் தெரிவித்தனர்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச திசமகராமையில் நடத்திய தேர்தல் ஊர்வலத்தில் கலந்து கொள்ளச் சென்ற நபர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மூலம்[தொகு]

Bookmark-new.svg