உள்ளடக்கத்துக்குச் செல்

சரத் பொன்சேகாவின் தரங்கள், பதக்கங்களை நீக்க அரசுத்தலைவர் அனுமதி

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 14, 2010

நேற்று இராணுவ நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவப் பதவிகள் அனைத்தையும் நீக்க நீதிமன்றம் இலங்கை அரசுத்தலைவரின் அனுமதியைக் கோரியிருந்தது. இன்று அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார். பொன்சேகா இதுவரை இராணுவத்தில் வகித்து வந்த ஜெனரல் பதவி உட்பட்ட தரங்கள் மற்றும் பதக்கங்கள் அனைத்தும் இதன் மூலம் பறிக்கப்பட்டுள்ளன.


அத்துடன் அவர் இன்று முதல் சாதாரண பொதுமகனாகவே கருதப்படுவார். இராணுவத்தில் சேவையாற்றிய போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.


தொடர்புள்ள செய்திகள்

மூலம்