சர்ச்சைக்குரிய குரீல் தீவுகளுக்கு உருசிய அதிபர் பயணம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 2, 2010

இரண்டாம் உலகப் போரின் போது சப்பானிடம் இருந்து உருசியா கைப்பற்றிய குரீல் தீவுகளுக்கு அந்நாட்டு அரசுத்தலைவர் திமீத்திரி மெத்வேதெவ் பயணம் மேற்கொண்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் முறுகல் நிலை தோன்றியுள்ளது.


சப்பானுக்கும் உருசியாவுக்கும் பல்வேறு காலப்பகுதியில் காணப்பட்ட எல்லைக் யில் காண்பிக்கும் குரீல் தீவுகளின் வரைபடம்

சப்பானின் வட பகுதியில் அமைந்துள்ள நான்கு குரீல் தீவுகளில் ஒன்று உருசியாவின் தென்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. குணசீர் அல்லது குணசீரி என அழைக்கப்படும் இத்தீவுக்கே உருசிய அதிபர் பயணம் மேற்கொண்டுள்ளார். நவம்பர் நடுப்பகுதியில் ஆசிய-பசிபிக் உச்சி மாநாடு இடம்பெறவிருக்கும் தருணத்தில் இவரது பயணம் இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சப்பான் மாஸ்கோவுக்கான தனது தூதரை மேலதிக ஆலோசனைக்காகத் தற்காலிகமாகத் திருப்பி அழைத்திருக்கிறது. மெத்வேதெவின் பயணம் தமக்கு கவலை அளித்துள்ளதாக சப்பான் கூறியுள்ளது.


"இந்த நான்கு வடக்குத் தீவுகளும் சப்பானுக்குச் சொந்தமானவை என்பதே எமது நிலைப்பாடு, எனவே அரசுத்தலைவரின் பயணம் கவலைக்குரியது," என சப்பான் பிரதமர் நவோட்டோ கான் தெரிவித்தார்.


சப்பானின் இந்த ஆட்சேபனை ஏற்றுக்கொள்ள முடியாதது என உருசிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரொவ் தெரிவித்தார். "அது எமது நிலம். உருசிய நிலத்துக்கே எமது தலைவர் சென்றுள்ளார்," என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


ஐம்பதுக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இத்தீவுக்கூட்டம் சப்பானின் முக்கிய வடக்குத் தீவான ஒக்காய்டோ இலிருந்து உருசியாவின் கம்சாத்க்கா குடாநாடு வரை பரவியுள்ளது. மெத்வேதெவ் பயணம் மேற்கொண்டுள்ள குணசீர் தீவு ஒக்காய்டோவில் இருந்து 10 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.


மூலம்[தொகு]

{{DEFAULTSORT:சர்ச்சைக்குரிய குரீல் தீவு]]