உள்ளடக்கத்துக்குச் செல்

சான் பிரான்சிஸ்கோ தீவிபத்தில் நால்வர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டம்பர் 11, 2010


சான் பிரான்சிஸ்கோவிற்கருகில் இடம்பெற்ற வெடி மற்றும் தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டு, மேலும் பலர் படுகாயமடைந்தனர்.


வியாழன் மாலையில் சான் புரூனோ நகரில் இடம்பெற்ற இவ்வெடிப்பினால் 53 வீடுகள் தகர்க்கப்பட்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. 1,000 அடி (300 மீட்டர்) உயரத்திற்கு தீப்பிழம்புகள் கிளம்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும், கடும் வெப்பம் காரணமாக அப்பகுதிக்குள் எவரும் செல்ல முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இயற்கை வாயுக் கசிவினாலேயே இவ்வெடி விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.


"போயிங் 747 விமானம் எம்மீது வீழ்ந்ததாக நான் கருதினேன்," என ஒரு தீயணைப்புப் படை வீரர் தெரிவித்தார்.


கிட்டத்தட்ட 41,000 பேர் வசிக்கும் சான் புரூனோ நகரம் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

மூலம்

[தொகு]