உள்ளடக்கத்துக்குச் செல்

செருமனியில் உலக சாதனை, சூரிய ஆற்றலில் இருந்து 22 கிகாவாட்டு மின்திறன்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 28, 2012

செருமனியில் சூரிய ஆற்றல் மூலம் மணிக்கு 22 கிகாவாட்டு (22,000 மெகாவாட்டு) மின்திறன் பெறப்பட்டு உலக சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செருமனியில் உள்ள ஒரு சூரிய ஆற்றல் நிலையம்

சப்பானில் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் புக்குசீமா அணு உலை விபத்துக்குள்ளானதை அடுத்து செர்மானிய அரசு 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணுஉலைகளையும் மூடிவிடத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 8 அணு உலைகள் மூடப்பட்டு விட்டன. மேலும் 9 உலைகள் எஞ்சியுள்ளன. இவை அனைத்தும் வளி, சூரிய ஆற்றல், மற்றும் உயிர்க்கூள ஆற்றல் போன்ற புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்திகளைப் பயன்படுத்தப்போவதாக செர்மனிய அரசு அறிவித்துள்ளது.


"மணிக்கு 22 கிகாவாட்டு சூரிய ஆற்றல் மின்சாரம் சனிக்கிழமையன்று தேசிய அளவில் வழங்கப்பட்டது. இது நாட்டின் மதிய நேர மின் தேவையின் 50 வீதத்தை நிறைவு செய்தது," எனப் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் நோர்பர்ட் ஆல்னொக் கூறினார். "எப்போதும் இல்லாத அளவு ஒரு நாடு இவ்வளவு மின்திறனை உற்பத்தி செய்துள்ளது இதுவே முதற்தடவை'" என அவர் கூறினார்.


மூலம்

[தொகு]