உள்ளடக்கத்துக்குச் செல்

சைபீரிய விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 3, 2010

சைபீரியாவின் வடக்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளாகியதில் 12 பேர் கொல்லப்பட்டதாக உருசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


உருசியாவில் கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்

விமானப் பணியாளர்கள் மூவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட ஒரு பயணி பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


கிராஸ்னயார்ஸ்க் நகரில் இருந்து 15 பேருடன் சென்ற அந்தோனொவ்-24 என்ற கத்திக்காவியா என்ற விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் இகார்க்கா என்ற நகரின் விமான நிலையத்தில் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளாகியது.


ஒரு குழந்தை உட்பட 11 பயணிகளும் நான்கு விமானப் பணியாளர்களும் இவ்விமானத்தில் பயணித்திருந்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

மூலம்[தொகு]