உள்ளடக்கத்துக்குச் செல்

சோயுஸ் விண்கலம் இருவருடன் பாதுகாப்பாகத் திரும்பியது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 20, 2010

நாசாவின் விண்வெளி வீரர் ஜெஃப் வில்லியம்ஸ், மற்றும் ரஷ்யாவின் மக்சிம் சுராயெவ் ஆகியோர் 167 நாட்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து விட்டு பாதுகாப்பாக சென்ற வியாழக்கிழமை மார்ச் 18 இல் கசகத்தான் திரும்பினர்.


சோயுஸ் டிஎம்ஏ-16 விண்கலத்தில் சென்ற வீரர்கள்: கை லலிபேர்ட், ஜெஃப் வில்லியம்ஸ், மக்சிம் சுராயெவ்

சோயுஸ் டிஎம்ஏ-16 என்ற விண்கலத்தில் விண்வெளி நிலையத்தை விட்டுப் புறப்பட்டு மூன்றரை மணி நேரத்தின் பின்பு கசக்ஸ்ததனில் உள்ள அர்க்காலிக் என்ற இடத்துக்குத் திரும்பினர்.


வில்லியம்ஸ், சுராயெவ் இருவரும் பூமிக்குத் திரும்பியதில், பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தற்போது இரசியாவின் அலெக் கோத்தொவ், சப்பானின் சொயிச்சி நொகுச்சி, நாசாவின் டி.ஜே.கிறீமர் மற்றும் ஒரு வான் பொறியாளர் ஆகியோர் அங்கு தங்கியிருக்கின்றனர்.


ஏப்ரல் 4 ஆம் நாள் சோயுஸ் விண்கலத்தில் மேலும் அலெக்சாண்டர் ஸ்குவோர்த்சொவ், மிக்கைல் கர்னியென்கோ மற்றும் நாசாவின் திரேசி டைசன் ஆகியோர் விண்வெளி ந்இலையத்துக்குச் செல்லவிருக்கின்றனர்.

மூலம்