சோவியத் காலத்து புகழ் பெற்ற சிலை மீண்டும் மாஸ்கோ வந்தது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், நவம்பர் 30, 2009சோவியத் காலத்தைய "தொழிலாளியும் கல்கோஸ் பெண்ணும்" என்ற புகழ் பெற்ற பிரமாண்டமான சிலை ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் சென்ற சனியன்று மீளப் புனரமைக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. இச்சிலை திருத்த வேலைகளுக்காக 2003 ஆம் ஆண்டில் ஐந்தாண்டுக் திட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இச்சிலை 2005 ஆம் ஆண்டில் மீளக்கொணரத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும், எக்ஸ்போ 2010 கண்காட்சி சங்காய் நகருக்கு அறிவிக்கப்படட்தை அடுத்து போதிய நிதிவசதி இல்லாமையினால் இச்சிலையின் புனரமைப்பு வேலைகள் பாதிக்கப்பட்டிருந்தன.


24.5-மீட்டர் உயரமான இச்சிலை தொழிலாளி ஒருவனும் கல்கோஸ் பெண்ணொருத்தியும் சோவியத்தின் சின்னங்களான அரிவாளையும் சுத்தியலையும் ஏந்தியபடி காட்சியளிக்கின்றனர். முற்றிலும் இரும்பினாலான இச்சிலை வேரா மூக்கினா, பொரிஸ் இயோஃபான் ஆகியோரினால் அமைக்கப்பட்டு முதன் முதலில் 1937 ஆம் ஆண்டில் பாரிசில் நடந்த பன்னாட்டுக் கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டது. இது பின்னர் ரஷ்யாவுக்குக் கொண்டு வரப்பட்டு மாஸ்கோவில் நிரந்தரமாக வைக்கப்பட்டது.


இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இச்சிலை மாஸ்கோவில் காட்சிப்படுத்தப்படும் என இப்போது எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்[தொகு]