தென் கொரிய விண்கலன் ஏவப்பட்டு சிறிது நேரத்தில் வெடித்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 10, 2010

தென் கொரியா ஏவிய விண்கலன் (rocket) ஒன்று ஏவப்பட்டு சிறிது நேரத்தில் வெடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நேரோ-1

நேரோ-1 என்றழைக்கப்படும் இவ்விண்கலம் நேரோ விண்வெளி மையத்தில் இருந்து 1701 (0801 GMT) மணிக்கு ஏவப்பட்டு 137 செக்கன்களில் வெடித்துள்ளதாக தென்கொரிய அறிவியல் துறை அமைச்சர் ஆன் பியோங்-மான் தெரிவித்தார்.


70 கிலோமீட்டர் உயரத்தில் இதனுடனான தொடர்புகள் அனைத்தும் முறிவடைந்துள்ளது.


"விண்கலனின் முனையில் பொருத்தப்பட்ட புகைப்படக்கருவியில் தெரிந்த பிரகாசமான ஒளி மூலம் இந்த விண்கலம் தனது முதலாவது நிலையிலேயே வெடித்திருப்பது தெரிய வந்துள்ளது," என திரு. ஆன் தெரிவித்தார்.


இவ்விண்கலனின் வெடிப்பு தென்கொரியாவின் விண்வெளிப் பந்தயத்திற்கு ஒரு பெரும் தோல்வி அன அவதானிகள் கருதுகின்றனர்.


தென் கொரியா கடந்த 2009 ஆகஸ்டில் முதற்தடவையாக விண்கலன் ஒன்றை ஏவ முயற்சித்து தோல்வி கண்டது. அதனை அடுத்து இந்த இரண்டாவது முறையும் தோல்வி கண்டுள்ளது.


ஆசியாவில் சீனா, இந்தியா, சப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே வெற்றிகரமாக ஏவுகலன்களை ஏவியுள்ளன. சீனா மூன்று முறை மனிதர்களை விண்ணுக்கு அனுப்பியது.


இந்த ஏவுகலனின் ஒரு பகுதி இரசியாவிலும் மீது தென்கொரியாவிலும் வடிவமைக்கப்பட்டது. இதற்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளது.

தொடர்புள்ள செய்தி[தொகு]

மூலம்[தொகு]