உள்ளடக்கத்துக்குச் செல்

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சை உலுக்கிய புதிய நிலநடுக்கங்கள்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 23, 2011

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரை இன்று பல நிலநடுக்கங்கள் தாக்கியது. இதனால் உயிச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், சேதங்களும் மிகக் குறைவானதாக இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் தமது வீடுகளில் இருந்து வெளியேறினர்.


கிறைஸ்ட்சேர்ச்

உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 1358 மணிக்கு 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு அறிவித்தது. இது நகரின் வட-கிழக்கே 26 கிமீ தூரத்தில் தாக்கியிருந்தது. 80 நிமிடங்களின் பின்னர் 5.9 அளவு நிலநடுக்கம் ஏறத்தாழ அதே இடத்தில் தாக்கியது. பலர் சிறு காயங்களுக்கு உள்ளாயினர் என்றும், 19 பேர் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த இரண்டு முக்கிய தாக்குதல்களை விட மேலும் சிறிய நிலநடுக்கங்கள் ஆங்காங்கே பிற்பகல் முழுவதும் உணரப்பட்டன. நகரின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மின்சாரமும் தடைப்பட்டது. பெக்சுலி மாவட்டத்தின் சாலைகளில் இரண்டு பெரும் குழிகள் தோன்றியுள்ளன.


கடந்த பெப்ரவரி மாதத்தில் கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தினால் 181 பேர் கொல்லப்பட்டனர். $15.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]