உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரியாவில் மத வன்முறையை அடுத்து நூற்றுக்கணக்கானோர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 8, 2010


நைஜீரியாவில் ஜொஸ் நகரில் நேற்று மத வன்முறையை அடுத்து இடம்பெற்ற தாக்குதல்களில் ஐநூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக உள்ளூர்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நைஜீரியாவில் ஜொஸ் நகரின் அமைவிடம்

முன்னர் 100 பேர் வரையில் இறந்ததாக தகவல்கள் வெளிவந்தன. ஆனாலும் உண்மை நிலவரத்தை அறிய முடியவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


ஜொஸ் நகருக்கு அருகே உள்ள இரண்டு கிருத்தவக் கிராமங்கள் அயலில் உள்ள மலைக்கிராமங்களில் இருந்து வந்த கும்பலால் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.


இங்கு உள்ளூர் கிருத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கிடையே பல ஆண்டுகாலமாக முறுகல் நிலை இருந்து வந்துள்ளது.


கடந்த ஜனவரியில் பல நூற்றுக்கணக்கானோர் இறந்ததற்குப் பழி வாங்கவே நேற்றைய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


பதில் அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தன் இராணுவத்தினரை உசார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


சொட் மற்றும் டோகோ-நகாவா ஆகிய கிராமங்களில் நேற்றைய தாக்குதல்களில் இறந்தோரில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.


ஜொஸ் நகரம் நைஜீரியாவின் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வடக்குப் பகுதிக்கும், கிருத்தவர்கள் அதிகமமக வாழும் தெற்குப் பகுதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது.

தொடர்புள்ள செய்தி[தொகு]

மூலம்[தொகு]

[