பல்கலைக்கழக புகுமுகத் தேர்வில் லைபீரிய மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 27, 2013

இவ்வாண்டு பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வில் லைபீரிய மாணவர்கள் எவரும் சித்தியடையாதது குறித்து அந்நாட்டின் கல்வி அமைச்சர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.


லைபீரியப் பல்கலைக்கழகத்துக்குத் தேர்வு சோதனை எழுதிய அனைத்து 25,000 மாணவர்களும் சோதனையில் தோல்வியடைந்தனர். மாணவர்களிடம் ஆர்வம் இல்லை, மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு இல்லை என பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


லைபீரியாவின் பள்ளிகள் அடிப்படைக் கல்விக்கான வசதிகள் எதுவும் கிடையாது, போதியளவு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவு என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், சோதனை எழுதிய எவரும் சித்தியடையாமல் போனது இம்முறையே முதற் தடவையாக நடந்துள்ளது. அடுத்த மாதம் புதிய கல்வி ஆண்டு தொடங்கும் போது முதலாண்டு மாணவர்கள் எவரும் அங்கு இருக்க மாட்டார்கள்.


லைபீரியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உள்நாட்டுப் போர் முடிவடைந்து தற்போது அமைதி திரும்பியுள்ளது.


மூலம்[தொகு]