பெருவில் சுரங்கத்தினுள் அகப்பட்ட 9 தொழிலாளர்கள் ஒரு வாரத்தின் பின்னர் மீட்பு
Appearance
பெருவில் இருந்து ஏனைய செய்திகள்
- 28 சூன் 2013: பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான வாரி அரசுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது
- 8 சூன் 2013: பெருவின் கம்யூனிசப் போராளிக் குழுத் தலைவருக்கு ஆயுள் தண்டனை
- 2 மே 2013: குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை
- 13 நவம்பர் 2012: மச்சு பிக்ச்சு தொல்பொருட்கள் அனைத்தையும் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்தது
- 11 ஏப்பிரல் 2012: பெருவில் சுரங்கத்தினுள் அகப்பட்ட 9 தொழிலாளர்கள் ஒரு வாரத்தின் பின்னர் மீட்பு
பெருவின் அமைவிடம்
புதன், ஏப்பிரல் 11, 2012
பெருவில் சுரங்கம் ஒன்றினுள் பாறை ஒன்று வீழ்ந்ததில் சுரங்கத்தினுள் சிக்கியிருந்த 9 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருவின் தெற்குப் பகுதியில் கபேசா டி நேக்ரோ என்ற இடத்தில் உள்ள செப்புச் சுரங்கம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டு 200 மீட்டர் ஆழத்தில் 9 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். இவர்களை வெளியே மீட்கும் பணி ஆரம்பிக்கபட்டு இன்று புதன்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது. வெளியே கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களை அவர்களது உறவினர்களும், பெருவின் அரசுத்தலைவர் ஒலாண்டா உமாலாவும் வரவேற்றனர்.
தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்
[தொகு]- Trapped Peruvian miners rescued, பிபிசி, ஏப்ரல் 11, 2012
- Nine Peruvian miners rescued after being trapped for days, சிஎன்என், ஏப்ரல் 11, 2012