உள்ளடக்கத்துக்குச் செல்

முகநூல் சமூக வலைத்தளத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர்களாக உயர்வு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 6, 2011

சமூக வலைத்தளம் முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் கோல்ட்மன் சாஷ் மற்றும் ஒரு இரசிய முதலீட்டாளர் ஆகியோரின் முதலீடுகளால் தனது மதிப்பை 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.


கோல்ட்மேன் சாஷ் நிறுவனம், 450 மில்லியன் டாலர் முதலீட்டையும் டிஜிட்டல் ஸ்கை டெக்னொலொஜி நிறுவனம் 50 மில்லியன் டாலர்களையும் முதலிட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கின் மதிப்பு 50 பில்லியன் என்ற வரையறையைக் கொண்டே இந்த முதலீடுகள் செய்யப்பட்டதாக அச்செய்தித்தாள் தெரிவிக்கிறது.


கோல்ட்மன் சாசின் முதலீட்டை அடுத்து, பேஸ்புக் இனித் தனது பங்குகளை வெளியிட வேண்டி வரும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


சமூக வலைத்தளம் 50 பில்லியன் டாலர் பெறுமதியானதாக இருக்குமானால் அது ஈபே, மற்றும் டைம் வார்னர் போன்ற முன்னணி வர்த்தக நிறுவனங்களின் மதிப்பை விட அதிகமானதாகும். பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் உள்ளடக்குவதால் அதன் மதிப்பு அதிகமானதாக இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


மூலம்[தொகு]