மெக்சிக்கோ சிறையில் ஏற்பட்ட மோதலில் 44 கைதிகள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 21, 2012

இலத்தீன் அமெரிக்க நாடான மெக்சிக்கோவின், வடக்கு மாகாணமான மான்டெரரி பகுதியில், ஆப்போடாகா சிறையில் நேற்று முன்தினம் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 44 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இச்சிறைச்சாலையில் மொத்தம் 3,000 கைதிகளை அடைக்கும் வசதி உண்டு. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் 30 சதவீதம் அதிகமான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிறைச்சாலையின் 'டி' கட்டடத்தில் அடைக்கப்பட்டிருந்த 2 தரப்பு கைதிகள் இடையே அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட மோதலின் போது, கையில் கிடைத்த பயங்கர ஆயுதங்களால் கைதிகள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் சுட்டது சிறைச்சாலை அதிகாரிகளா அல்லது கைதிகளா என்பது தெரியவில்லை.


மெக்சிக்கோ சிறையில் கைதிகள் மோதிக்கொள்வது வழக்கமான ஒரு விடயமாகும். இதே போன்று கடந்த மாதமும் இச்சிறையில் கலவரம் நடந்ததுள்ளது. இந்த சிறையில் போதை மருந்து கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய் கைதிகள் உள்ளனர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகின்றது.


கடந்த மாதம் மெக்சிகோவில் உள்ள மற்றொரு சிறைச்சாலையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். 2010 ஆம் ஆண்டில் சிறைச்சாலை வன்முறைகளில் 29 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]