உள்ளடக்கத்துக்குச் செல்

வணிகச்செய்திகள், ஏப்ரல் 30, 2011

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 30, 2011

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாகக் குறைந்துவருவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் பெருமளவு முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். உடனடி வழங்கலுக்கான விலை ஓர் அவுன்சு 1534.05 அமெரிக்க டாலராக ஆனது. இது முந்தைய விலையைக்காட்டிலும் 0.4 விழுக்காடு உயர்வாகும். அதேபோல் வெள்ளியின் விலையும் ஓர் அவுன்சு 48.0263 அமெரிக்க டாலராக உயர்ந்தது.


ஏப்ரல் 25ஆம்நாள் அன்று வெள்ளி உச்சவிலையாக 49.79 அமெரிக்க டாலரை எட்டிப்பிடித்தது. அதேபோல், பல்லாடியத்தின் விலையும் 0.6 விழுக்காடு உயர்ந்து ஓர் அவுன்சு 772.50 அமெரிக்க டாலராக ஆனது. பிளாட்டினம் சிறுமாற்றம் பெற்று ஓர் அவுன்சு 1826.75 அமெரிக்க டாலராக உயர்ந்தது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 1,080 உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த மார்ச் 30-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 15,464 என்ற விலையில் விற்பனை ஆனது. அடுத்த 30 நாள்களில் ரூ. 1,080 விலை அதிகரித்து, நேற்று ஏப்ரல் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ரூ. 16,544 என்ற விலையில் விற்பனையானது. ஒரு கிராம் ரூ.2,068.


மூலம்

[தொகு]