வளைகுடாப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 3, 2009, ஈராக்:


1991 ஆம் ஆண்டில் வளைகுடாப் போரின் போது அமெரிக்கத் தரப்பில் கொல்லப்பட்ட முதலாவது போர் வீரரான மைக்கல் ஸ்கொட் ஸ்பெய்ச்சர் என்பவரின் உடல் 18 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்டனான ஸ்பெய்ச்சர் 1991 ஜனவரி 17 ஆம் நாள் ஈராக்கின் மேலாக விமானத்தில் பறந்த போது விமானம் தாக்கப்பட்டு காணாமல் போனது.

அமெரிக்க போர் விமானி கப்டன் மைக்கல் ஸ்பெய்ச்சர்

விமானி கப்டன் மைக்கேல் ஸ்காட் ஸ்பெய்ச்சரின் உடல் இதுவரை மீட்கப்பட்டாமல் இருந்தது. இவரை போரின் போது காணாமல் போனவர்களின் பட்டியலில் அமெரிக்கப் படைத்துறை சேர்த்திருந்தது. இவரைக் கண்டுபிடிக்க அமெரிக்கத் தரப்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. 2003, 2005 இல் ஈராக்கில் உள்ள சிறைகள், சுடுகாடுகள் அனைத்திலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.


இந்த நிலையில் ஈராக்கிய பொதுமகன் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஈராக்கில் அன்பார் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமெரிக்க இராணுவ உளவுப் படையினர் இவரது உடலைக் கண்டுபிடித்தனர். இவர் இறந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டதால் எலும்பு கூடு மட்டும் மீட்கப்பட்டது.


மூலம்[தொகு]