உள்ளடக்கத்துக்குச் செல்

விளாதிமிர் பூட்டின் மூன்றாம் முறையாக உருசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 5, 2012

விளாதிமிர் பூட்டின் மூன்றாம் முறையாக உருசியாவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


உருசியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பிரதமராகப் பதவியில் இருந்த விளாதிமிர் பூட்டின் மீண்டும் தற்போது சனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முதற்கட்ட கணிப்பின் படி, 99.5 வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பூட்டின் 63.71% வாக்குகளைப் பெற்றுள்ளார். இது 44.9 மில்லியன் வாக்குகள் ஆகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கென்னாடி சுகானொவ் 17.19% வாக்குகளைப் பெற்றுள்ளார்.


தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க் கட்சிகள் முறையிட்டுள்ளன. பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளித்துள்ளனர் என அவர்கள் கூறுகின்றனர். இன்று திங்கட்கிழமை மாஸ்கோவின் மத்திய பகுதியில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


அதே வேளையில் பூட்டினின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கிரெம்ளினுக்கு முன்னே கூடி தமது தலைவரின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


மூலம்

[தொகு]