1940 காட்டின் படுகொலை தொடர்பான ஆவணங்களை இரசியா வெளியிட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 28, 2010

முன்னர் இரகசியமாகப் பேணப்பட்டு வந்த 1940 காட்டின் படுகொலைகள் தொடர்பான ஆவணங்களை இரசியா வெளியிட்டுள்ளது. இதன்போது 22,000 போலந்து அதிகாரிகள் சோவியத் படைகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.


”பக்கெட் இல 1” எனப் பெயரிடப்பட்ட இந்த ஆவணங்கள் முன்னர் சிறப்பு ஆய்வாளர்களுக்கே பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தது.


இப்படுகொலைகளில் தாம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என சோவியத் ஒன்றியம் பல தசாப்தங்களாகக் கூறி வந்துள்ளது.


இம்மாதம் காட்டின் படுகொலை நினைவு நாள் நிகழ்வில் கந்து கொள்ளவென இரசியா வந்திருந்த போலந்து அரசுத்தலைவர் பற்றும் பல உயரதிகாரிகள் விமானவிபத்தில் கொல்லப்பட்டதை அடுத்து போலந்துக்கும் இரசியாவுக்கும் இடையில் உறவுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.


இரசியாவின் அரசுத் தலைவர் திமீத்ரி மெத்வேதெவ் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த ஆவணங்கள் இணையத்தில் வெலளியிடப்பட்டுள்ளன.


இரசியா காட்டின் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் என போலந்து பல ஆண்டுகலாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்தது.


இம்மாத ஆரம்பத்தில், இரசிய மற்றும் போலந்து பிரதமர்கள் இருவரும் சேர்ந்து முதற்தடவையாக இப்படுகொலைகளை நினைவு கூர்ந்தார்கள்.


சில நாட்களின் பின்னர், இப்படுகொலைகள் தொடர்பான வேறொரு நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொள்ல வந்திருந்த போலந்து அதிபர் லேக் காச்சின்ஸ்கி மற்றும் 90 பேரும் மேற்கு இரசியாவில் விமானத்தில் தரையிரங்கும் போது ஏற்பட்ட விபத்தில் கொல்லப்பட்டனர்.


ஏப்ரல் 1940 படுகொலைகள் சோவியத் இரகசியப் படையினரால் அன்றைய சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது கிட்டத்தட்ட 22,000 போலந்து அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், மற்றும் கலைஞர்கள், காட்டின் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டனர்.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்