2012 மாகாண சபைத் தேர்தல்: சபரகமுவா மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது
- இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கு அமைச்சர்கள் தெரிவு, தமிழர்கள் எவரும் இல்லை
- இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியமைப்பு
- 2012 தேர்தல்: கிழக்கு மாகாண சபைக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 8 சிங்களவர்கள் தெரிவு
- 2012 மாகாண சபைத் தேர்தல்: கிழக்கு மாகாணத்தில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை
- 2012 மாகாண சபைத் தேர்தல்: வடமத்திய மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது
ஞாயிறு, செப்டெம்பர் 9, 2012
இலங்கையில் நேற்று இடம்பெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. சபரகமுவா மாகாண சபைத் தேர்தலில் இரண்டு கூடுதல் (போனஸ்) இடங்கள் உட்பட அதிகூடிய 28 இடங்களைப் பெற்று இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இம்மாகாண சபையில் கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 14 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேவேளை, இம்மாகாணத்தில் தனித்துப் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தமிழ் வேட்பாளர்கள் இருவர் தெரிவாகியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்மாகாணத்தில் மலையக மக்கள் முன்னணி மற்றும் சனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டது.
- இறுதி முடிவுகள்
- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 488714 வாக்குகள் (28 இடங்கள்)
- ஐக்கிய தேசிய கட்சி - 286857 வாக்குகள் (14 இடங்கள்)
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 25985 வாக்குகள் (2 இடங்கள்)
மூலம்
[தொகு]- UPFA wins Sabaragamuwa PC, டெய்லி மிரர், செப்டம்பர் 8, 2012
- இலங்கைத் தேர்தல் திணைக்களம்