27ம் திகதி காலை இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 22, 2010

வரும் சனவரி 26ம் திகதி இலங்கையில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலிற்கான தேர்தல் முடிவுகள் மறுநாள் (27 சனவரி, 2010) வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அறிவித்துள்ளார்.


இடந்த பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக வாக்களிப்பு அடையாள அட்டைகள் 207,120 விநியோகிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆயினும் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பகுதியினர் வாக்களிக்க ஆர்வமாக வருவார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற, செய்தியாளர் சந்திப்பில், உரையாற்றிய அவர் இந்தமுறை வாக்கு மோசடிகளை கட்டுப்படுத்த விசேட குறியீடுகளை பயன்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


மூலம்