உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்காவில் சுரங்க விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 7, 2010


ஐக்கிய அமெரிக்காவில் மேற்கு வேர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் திங்கட்கிழமை இடம்பெற்ற வெடி விபத்து ஒன்றில் 25 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நால்வரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிகப்பெரும் சுரங்க விபத்து இதுவாகும்.


ஐக்கிய அமெரிக்காவில் மேற்கு வேர்ஜீனியா மாநிலம்

மீதேன் வாயுக் கசிவு காரணமாக மீட்புப் பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இடை நிறுத்தி வைக்கப்பட்டது. சுரங்கத்தினுள் காற்றோட்டத்தை ஏற்படுத்தும் முயற்சி இன்று முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காணாமல் போன தொழிலாளர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் அவர்களை எப்படியும் கண்டுபிடித்து விடுவோம் அன எவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


இந்தச் சுரங்கம் மசே எனர்ஜி என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். ஏற்கனவே இந்தச் சுரங்கத்தில் பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக இந்த நிறுவனத்துக்கு அரசு $900,000 பணம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.


அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா இறந்தவர்களின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.


"மீட்புப் பணிகளுக்கு நடுவண் அரசு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாரான நிலையில் உள்ளது," என அவர் தெரிவித்தார்.

மூலம்

[தொகு]