உள்ளடக்கத்துக்குச் செல்

இரசியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 27, 2010

இரசியாவின் தெற்குப் பகுதியில் ஸ்தாவ்ரப்போல் நகரில் கலையரங்கு ஒன்றில் தொலைவில் இருந்து இயக்கப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் காயமடைந்ததாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கலாச்சார மாளிகையின் அருகில் உள்ள ஒரு சதுக்கம்
இரசியாவில் ஸ்தாவ்ரப்போல் மாவட்டம்

இக்குண்டுவெடிப்பு நேற்றுக் காலை மாஸ்கோ நேரம் 18.45 (UTC 14.45) மணிக்கு நகரில் உள்ள தொழிற்சங்க விளையாட்டு மற்றும் பண்பாட்டுக் கலையரங்கம் ஒன்றின் முன்னால் இடம்பெற்றுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த நேரம் அங்கு பெருமளவில் பொதுமக்கள் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


செச்சினிய நிகழ்ச்சி ஒன்று ஆரம்பமாகவிருந்த வேளையிலேயே குண்டு வெடித்துள்ளது. இறந்தவர்கள் அனைவரும் பெண்கள் என்றும் அதில் ஒருவர் 12 வயதுச் சிறுமி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இரசிய, ஆர்மீனிய மற்றும் செச்சினியர்கள் ஆவர்.


இரசியாவில் அண்மைக்காலத்தில் செச்சினியப் பேராளிகளின் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. சென்ற மார்ச் 29 இல் மாஸ்கோவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 40 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

மூலம்

[தொகு]