உள்ளடக்கத்துக்குச் செல்

ரஷ்யாவில் போராளிகளுக்கெதிரான தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 12, 2010


ரஷ்யாவின் இங்குசேத்தியா குடியரசில் ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரஷ்யாவின் சர்ச்சைக்குரிய குடியரசுகள்

செச்சினிய எல்லையில் உள்ள மலைக்காடுகளில் வியாழன் அன்று இராணுவத்தினர் போராளிகளைச் சுற்றிவளைத்த போதே இரு பகுதியினருக்கும்ம் இடையில் சண்டை வெடித்தது.


இங்குசேத்தியா மற்றும் தாகெஸ்தான் குடியரசுகளில் கடந்த இரண்டாண்டுகளாக ரஷ்ய ஆட்சிக்கெதிராக முஸ்லிம் தீவிரவாதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


வியாழன் அன்று இரசியப் படையினர் அங்கு 5 சதுர கிமீ பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதல் அங்கு தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக அறிவிக்கப்படுகிறது.


"தமக்குக் கிடைத்த ஒரு தகவாலை அடிப்படையாக வைத்தே இத்தாக்குதலைத் தாம் தொடர்ந்ததாக இராணுவத்தினர் அறிவித்திருக்கின்றனர். கிளர்ச்சிப்படைத் தலைவர் உமரோவ் என்பவரின் ஆட்கள் ஆர்ஷ்டி என்ற கிராமத்தில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.


1994 ஆம் ஆண்டில் இருந்து ரஷ்ய இராணுவத்தினர் செச்சினியா குடியரசில் பிரிவினைவாதிகளுக்கெதிராக போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் அங்கு இறந்துள்ளனர். மேலும் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.

மூலம்

[தொகு]