உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப் புலிகளின் ஆயுத முகவர்கள் அமெரிக்க நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 12, 2010


மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், தமீழீழ விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை வாங்க முயன்றபோது அமெரிக்க FBI புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட கனடாவைச் சேர்ந்த தமிழ் ஆயுத முகவர்கள் சபாரட்ணம், தணிகாசலம் மற்றும் யோகராசா ஆகியோரை அமெரிக்க நீதி மன்றில் நிறுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 11 இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாக இருந்தாலும் யோகராசா மட்டுமே நீதி மன்றத்தில் இன்று ஆஜரானார். ஏனையவர்களை ஜனவரி 22 இல் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி மன்றத்திற்கு வெள்ளை உடை அணிந்து வந்த யோகராசா ஏனைய ஆயுத முகவர்களின் குடும்பங்களை நோக்கி சிரித்து கையசைத்ததுடன் ஊடகங்களுக்கு எவ்வித கருத்தையும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தார்.


இவர்கள் இலங்கை விமானப்படையின் கிபிர் விமானங்களைத் தாக்கி அழிக்க வெப்பத்தை தேடி அழிக்கும் வல்லமை கொண்ட ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 10 மற்றும் 500 ஏ.கே. 47 வகை துப்பாக்கிகளையும் கொள்வனவு செய்ய முயன்றபோதே அமெரிக்க புலனாய்வுத்துறையினால் கைதுசெய்யப்பட்டனர்.


நீதி மன்றத்தினால் இவர்களுக்கு தலா 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலம்

[தொகு]