உள்ளடக்கத்துக்குச் செல்

பெருவின் நடுக் கரைப்பகுதியைக் கடும் நிலநடுக்கம் தாக்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 30, 2012

தென் அமெரிக்க நாடான பெருவின் நடுக் கரைப் பகுதியை 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இன்று நள்ளிரவுக்கு சர்ரூப் பின்னர் ஈக்கா என்ற நகரின் தென்கிழக்கே 15கிமீ தொலைவில் 39கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டிருந்தது. பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலநடுக்கத்தை அடுத்து மின்சாரம் அங்கு தடைப்பட்டுள்ளது. எனினும் பெரும் சேதம் ஏற்படவில்லை.


இதே பகுதியில் 2007 ஆம் ஆண்டு 7.9 அளவில் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்திருந்தனர்.


மூலம்

[தொகு]