23 உள்ளூராட்சி மன்றங்களில் கொழும்பு, கல்முனை தவிர்ந்த 21 மன்றங்களை ஆளும் கட்சி கைப்பற்றியது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 9, 2011

இலங்கையில் நேற்று நடைபெற்ற 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 21 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.கல்முனை மாநகர சபையை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வென்றுள்ளது.


23 உள்ளூராட்சி சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் 245 பேரும், ஐதேகவில் 131 பேரும், ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியில் 5 பேரும், முஸ்லிம் காங்கிரசில் 11 பேரும், ஏனைய கட்சிகளில் 28 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 101,920 வாக்குகளுடன் 24 இடங்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. எனினும் 53 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் அக்கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளது. மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.


கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கல்முனை மாநகரசபையை 11 இடங்களைப் பெற்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 4 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவதாக வந்துள்ளது. ஆளும் கூட்டணிக்கு 3 இடங்களும் ஐதேக விற்கு 1 இடமும் கிடைத்தன.


58 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக கண்டி மாநகரசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.


நாட்டில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் இவ்வாண்டு மார்ச் 17 ஆம் நாள் முதற்கட்டமாக 245 உள்ளூராட்சி சபைகளுக்கும், இரண்டாம் கட்டமாக சூலை 23 இல் 65 உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டன. மூன்றாவது கட்டமாக நேற்று 23 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று ஆகிய இரு உள்ளூராட்சி சபை பிரதேசங்களிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடையாததால் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மூன்றாம் கட்டத் தேர்தல் முடிவுகள்
  • கல்முனை மாநகர சபை
    • இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகள் 11 உறுப்பினர்கள்
    • இலங்கை தமிழரசு கட்சி 9,911 வாக்குகள் 4 உறுப்பினர்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8,524 வாக்குகள் 3 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 2,805 வாக்குகள் 1 உறுப்பினர்
  • கொழும்பு மாநகர சபை
    • ஐக்கிய தேசிய கட்சி 101,920 வாக்குகள் 24 உறுப்பினர்கள்
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 77,089 வாக்குகள் 16 உறுப்பினர்கள்
    • ஜனநாயக மக்கள் முன்னணி 26,229 வாக்குகள் 6 உறுப்பினர்
    • இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 9,979 வாக்குகள் 2 உறுப்பினர்கள்
    • ஐக்கிய ஜனநாயக முன்னணி 7,830 வாக்குகள் 2 உறுப்பினர்கள்
    • சுயேட்ச்சைகுழு 2ம் இலக்கம் 4,085 வாக்குகள் 1 உறுப்பினர்
    • மக்கள் விடுதலை முன்னணி 3,162 வாக்குகள் 1 உறுப்பினர்
    • சுயேட்ச்சைகுழு 1ம் இலக்கம் 2,962 வாக்குகள் 1 உறுப்பினர்
  • தெகிவளை - கல்கிசை மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 39,812 வாக்குகள் 16 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 31,082 வாக்குகள் 11 உறுப்பினர்கள்
    • ஜனநாயக மக்கள் முன்னணி 2,167 வாக்குகள் 1 உறுப்பினர்
    • மக்கள் விடுதலை முன்னணி 1,568 வாக்குகள் 1 உறுப்பினர்
  • நுவரெலியா மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,275 வாக்குகள் 6 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 5,781 வாக்குகள் 3 உறுப்பினர்கள்
    • ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி 1,237 வாக்குகள் 1 உறுப்பினர்
  • கண்டி மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 23,189 வாக்குகள் 13 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 20,087 வாக்குகள் 10 உறுப்பினர்கள்
    • இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1,248 வாக்குகள் 1 உறுப்பினர்
  • கொலன்னாவ நகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11,303 வாக்குகள் 6 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 10,667 வாக்குகள் 4 உறுப்பினர்கள்
    • ஜனநாயக மக்கள் முன்னணி 938 வாக்குகள் 1 உறுப்பினர்
  • மாத்தறை மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20,681 வாக்குகள் 9 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 12,619 வாக்குகள் 5 உறுப்பினர்கள்
    • மக்கள் விடுதலை முன்னணி 1,449 வாக்குகள் 1 உறுப்பினர்
  • குருணாகல் மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 8,578 வாக்குகள் 8 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி - 4,838 வாக்குகள் 4 உறுப்பினர்கள்
  • அம்பாந்தோட்டை பிரதேச சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 11,836 வாக்குகள் 6 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி - 3,788 வாக்குகள் 1 உறுப்பினர்
  • அநுராதபுரம் மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 14,849 வாக்குகள் 10 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி - 5,028 வாக்குகள் 3 உறுப்பினர்கள்
  • காலி மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 23,539 வாக்குகள் 11 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 16,137 வாக்குகள் 7 உறுப்பினர்கள்
    • மக்கள் விடுதலை முன்னணி 1,085 வாக்குகள் 1 உறுப்பினர்
  • அம்பாந்தோட்டை மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,183 வாக்குகள் 8 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 4,742 வாக்குகள் 4 உறுப்பினர்கள்
  • பதுளை மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13,337 வாக்குகள் 10 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 6,982 வாக்குகள் 5 உறுப்பினர்கள்
  • குண்டசாலை பிரதேச சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34,488 வாக்குகள் 14 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 16,934 வாக்குகள் 6 உறுப்பினர்கள்
    • சுயேட்சைக்குழு 2,128 வாக்குகள் 1 உறுப்பினர்
    • மக்கள் விடுதலை முன்னணி 1,561 வாக்குகள் 1 உறுப்பினர்
  • மாத்தளை மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11,407 வாக்குகள் 9 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 4,751 வாக்குகள் 3 உறுப்பினர்கள்
    • சுயேட்சைக்குழு - 05ம் இலக்கம் 552 வாக்குகள் 1 உறுப்பினர்
  • இரத்தினபுரி மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 15, 626 வாக்குகள் 11 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 6,820 வாக்குகள் 4 உறுப்பினர்கள்
  • கங்கவட்ட கோறளை பிரேதச சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14,083 வாக்குகள் 8 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 9,418 வாக்குகள் 4 உறுப்பினர்கள்
  • சூரியவெவ பிரதேச சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14,279 வாக்குகள் 4 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 5,388 வாக்குகள் 1 உறுப்பினர்
  • கம்பகா மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 22,679 வாக்குகள் 14 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 6,478 வாக்குகள் 3 உறுப்பினர்கள்
    • சுயேட்சைக்குழு 03ம் இலக்கம் 835 வாக்குகள் 1 உறுப்பினர்
  • நீர்கொழும்பு மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,232 வாக்குகள் 16 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 24,712 வாக்குகள் 9 உறுப்பினர்கள்
    • இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1,588 வாக்குகள் 1 உறுப்பினர்
  • கொட்டிகாவத்த - முல்லேரியா பிரதேச சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,998 வாக்குகள் 16 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 12,269 வாக்குகள் 5 உறுப்பினர்கள்
  • ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 26,723 வாக்குகள் 13 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 10,830 வாக்குகள் 5 உறுப்பினர்கள்
    • சுயேட்சைக்குழு 3 ம் இலக்கம் 2,178 வாக்குகள் 1 உறுப்பினர்
    • லங்கா சமசமாஜ கட்சி 1,291 வாக்குகள் 1 உறுப்பினர்
  • மொறட்டுவ மாநகர சபை
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45,286 வாக்குகள் 18 உறுப்பினர்கள்
    • ஐக்கிய தேசிய கட்சி 25,224 வாக்குகள் 9 உறுப்பினர்கள்
    • சுயேட்சைக்குழு 1 ம் இலக்கம் 3,478 வாக்குகள் 1 உறுப்பினர்
    • மக்கள் விடுதலை முன்னணி 1,585 வாக்குகள் 1 உறுப்பினர்


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]