உலகின் 500 சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு முதலிடம்
- 19 திசம்பர் 2015: 10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் சனவரி 11-ம் திகதி துவக்கம் கல்வித்துறை அறிவிப்பு
- 14 திசம்பர் 2015: தமிழ்நாட்டில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு
- 13 சூன் 2014: அமெரிக்காவில் இந்திய வம்சாவளிச் சிறுவன் தனது 10வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தான்
- 4 சூன் 2014: அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியினை ஆதரிக்கும் பரப்புரை தமிழகத்தில் துவக்கம்
- 30 மே 2014: சிபிஎஸ்ஈ பன்னிரண்டாவது வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன
வெள்ளி, ஆகத்து 16, 2013
'உலகப் பல்கலைக்கழகங்களின் மீதான கல்வி சார்ந்த தகுதி மதிப்பிடுதல் - 2013' (Academic Ranking of World Universities - 2013) எனும் பட்டியலின்படி ஹார்வர்டு பல்கலைக்கழகம், உலகின் 500 சிறந்த பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை வகிக்கிறது. 2013ஆம் ஆண்டிற்கான இப்பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியல் வெளியிடத் தொடங்கப்பட்ட 2003ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் தன்னுடைய முதலாமிடத்தை தக்கவைத்து வருகிறது.
சீனாவின் சாங்காய் நகரத்திலுள்ள 'உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்கான நடுவம்' (Center for World-Class Universities) எனும் அமைப்பு, உலகின் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து பட்டியலிடுகிறது. வழங்கப்படும் கல்வித் தரத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது. இவ்வமைப்பானது சாங்காய் ஜியோ தாங் பல்கலைக்கழகத்தின் (Shanghai Jiao Tong University) கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகிறது.
மூலம்
[தொகு]- Only one Indian institute in the top 500 world universities, தி இந்து, ஆகத்து 16, 2013
- Academic Ranking of World Universities 2013 Press Release, ஆகத்து 15, 2013
- Academic Ranking of World Universities 2013, பார்த்த நாள்: ஆகத்து 16, 2013
- Center for World-Class Universities ( CWCU ), பார்த்த நாள்: ஆகத்து 16, 2013