உள்ளடக்கத்துக்குச் செல்

உலகின் 500 சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு முதலிடம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 16, 2013

'உலகப் பல்கலைக்கழகங்களின் மீதான கல்வி சார்ந்த தகுதி மதிப்பிடுதல் - 2013' (Academic Ranking of World Universities - 2013) எனும் பட்டியலின்படி ஹார்வர்டு பல்கலைக்கழகம், உலகின் 500 சிறந்த பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை வகிக்கிறது. 2013ஆம் ஆண்டிற்கான இப்பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியல் வெளியிடத் தொடங்கப்பட்ட 2003ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் தன்னுடைய முதலாமிடத்தை தக்கவைத்து வருகிறது.


சீனாவின் சாங்காய் நகரத்திலுள்ள 'உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்கான நடுவம்' (Center for World-Class Universities) எனும் அமைப்பு, உலகின் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து பட்டியலிடுகிறது. வழங்கப்படும் கல்வித் தரத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது. இவ்வமைப்பானது சாங்காய் ஜியோ தாங் பல்கலைக்கழகத்தின் (Shanghai Jiao Tong University) கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகிறது.


மூலம்

[தொகு]