உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவின் தாகெத்தான் மாநிலக் குண்டுவெடிப்புகளில் 12 பேர் உயிரிழந்தனர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 4, 2012

உருசியாவின் தாகெத்தான் மாநிலத் தலைநகர் மக்காச்கலாவிற்கு வெளியே இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


தாகெசுத்தான் குடியரசு

காவல்துறையினரின் காவலரண் அருகே இந்தக் குண்டுகள் நேற்று வியாழன் அன்று வெடித்தன. இச்சம்வத்தில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். அஸ்திரகான் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றை காவல்துறையினர் மறித்துச் சோதனையிட்ட போது அந்த வாகனம் வெடித்துச் சிதறியது. 20 நிமிடங்களின் பின்னர் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இறந்தவர்களில் பலர் காவல்துறையினரும், பாதுகாப்புப் பணியாளர்களுமே எனத் தெரிவிக்கப்படுகிறது.


இத்தாக்குதல்களை யார் நடத்தியது எனத் தெரிவிக்கப்படாவிட்டாலும், தாகெசுத்தானில் தனிநாடு கோரிப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அண்மைக் காலங்களில் தினமும் சண்டைகள் இடம்பெற்று வருகின்றன.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]