ஊடகவியலாளர் திசைநாயகம் பிணையில் விடுதலை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், சனவரி 11, 2010

இலங்கையின் ஊடகவியலாளர் திசைநாயகம் ரூபா 50,000 பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அது மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 7, 2008 இல் திசைநாயகம் இலங்கைக் காவல்துறையினரால் சமூக நல்லுறவைக் குலைக்கும் வண்ணம் எழுதியதற்காகக் கைது செய்யப்பட்டார், அத்துடன் கடந்த ஆண்டு அவருக்கு இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.


நாட்டின் இறைமைக்கு எதிரான கட்டுரைக்கு உரித்துடையவர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன.


இவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் செவ்வாயன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் பிணையில் செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தவிர 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக திஸ்ஸநாயகம் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


திசைநாயகத்தை விடுவிக்கக் கோரி கடந்த சில மாதங்களாக உள்ளூரிலும், சர்வதேச ரீதியிலும் இலங்கை அரசு மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]