உள்ளடக்கத்துக்குச் செல்

சோயூஸ் டிஎம்ஏ-04எம் விண்கலம் மூன்று வீரர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 17, 2012

உருசியாவின் சோயூஸ் விண்கலம் 123 நாட்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த மூன்று விண்வெளி வீர்ரகளுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.


கெனாடி பதல்க்கா, செர்கே ரேவின் ஆகிய இரு உருசிய வீரர்களும், ஜோ அக்காபா என்ற அமெரிக்க வீரரும் இன்று திங்கட்கிழமை காலையில் கசக்ஸ்தான் வந்திறங்கினர். கடந்த சூலை மாதத்தில் சென்ற உருசியாவின் யூரி மலென்ச்சியென்கோ, நாசாவின் சுனித்தியா வில்லியம்சு, மற்றும் சப்பானின் அக்கிஹிக்கோ ஓசிது ஆகிய மூவர் விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளனர். அடுத்த மாதம் மேலும் மூவர் சோயூஸ் திட்டத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கின்றனர்.


உள்ளூர் நேரம் 08:53 மணிக்கு விண்கலம் பாதுகாப்பாக வந்திறங்கியதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.


கடந்த ஆண்டு அமெரிக்க விண்ணோடத் திட்டம் முடக்கப்பட்டதன் பின்னர் விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்குத் தற்போது சோயூஸ் திட்டமே கை கொடுக்கிறது.



மூலம்

[தொகு]