மிகப் பழமையான மாயன் காலத்துக் கல்லறை குவாத்தமாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 26, 2012

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மாயன் காலத்துக் கல்லறைகளுள் மிகப் பழமையானதெனக் கருதப்படும் கல்லரை ஒன்று குவாத்தமாலாவின் மேற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியலாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


2,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு ஆட்சியாளர் அல்லது ஒரு மதத் தலைவர் ஒருவரின் கல்லறை ஒன்று ரெத்தல்ஹூலு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கல்லறையில் உள்ள கரிம-கால அளவையின் படி இது கிமு 700 முதல் கிமு 400 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என முகுவெல் ஒரேகோ என்பவர் தெரிவித்தார். பச்சை மாணிக்கக்கற்களைக் கொண்ட நகைகள், மற்றும் கழுகின் தலை போன்ற உருவம் பொறித்த கழுத்தணி ஒன்றும் அங்கு இருக்கக் காணப்பட்டன. எலும்புகள் எதுவும் அங்கு இருக்கவில்லை. அவை காலப்போக்கில் சிதைவுற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கழுகின் தலை வடிவம் அது ஒரு ஆட்சியாளனின் கல்லறை எனபதைக் குறிக்கிறது.


இக்கல்லறைக்குரியவனுக்கு கூத்சு சிமான் (K'utz Chman) என தொல்லியலாளர்கள் பெயரிட்டுள்ளனர். மாயன் மொழியில் இது பாட்டன் கழுகு ஆகும்.


கிமு 400களில் ஓல்மெக் இராச்சியத்தின் ஆதிக்கம் குறையத் தொடங்கி, பதிலாக மாயன் நாகரீகம் பரவத் தொடங்கியது. கிபி 250 முதல் 800 வரை நடு அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்தனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]