உள்ளடக்கத்துக்குச் செல்

2010 இலக்கிய நோபல் பரிசு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளருக்குக் கிடைத்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 8, 2010

எசுப்பானிய மொழி பேசும் உலகின் முன்னணி எழுத்தாளரும், பெரு நாட்டைச் சேர்ந்தவருமான மாரியோ பார்க்காசு யோசா 2010 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

மாரியோ பார்க்காசு யோசா

74 வயதாகும் மாரியோ யோசா முப்பதுக்கும் மேற்பட்ட புதினங்கள், நாடகங்கள், மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். 1982 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலத்தீன் அமெரிக்காவில் இருந்து நோபல் பரிசு இவருக்கே முதன்முதலாகக் கிடைத்துள்ளது.


நகைச்சுவைப் புதினங்கள், துப்பறியும் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், பரபரப்பூட்டும் அரசியல் புதினங்கள் என பலவகைப்பட்ட புனைவுப் படைப்புகளை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட யோசா 1990ம் ஆண்டு பெரு நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993ம் ஆண்டு எசுப்பானியா நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற இவர் தற்போது இலண்டன் (ஐக்கிய இராச்சியம்) நகரில் வசித்து வருகிறார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.


மூலம்