வணங்காமண் கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்
புதன், நவம்பர் 11, 2009
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
வணங்காமண் கப்பல் மூலமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் சிக்கல்களுக்கு மத்தியில் கடந்த மாதம் வவுனியாவுக்கு வந்து சேர்ந்த நிவாரணப் பொருட்களின் விநியோகத்தை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது.
சுமார் இரண்டு மாதத் தாமதத்தின் பின்னர் கடந்த மாதம் 24 ஆம் திகதி இந்தப் பொருட்கள் 27 கொள்கலன்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைக் களஞ்சியத்திற்கு வந்து சேர்ந்தன என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பரப்புரை இணைப்பாளர் றுக்சான் ஒஸ்வெல்ட் தெரிவித்தார்.
விநியோகத்திற்கு வசதியாக வவுனியா களஞ்சியத்தில் இந்தப் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு முதல் தொகுதியாக மனிக்பாம் 4 ஆம் வலயத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால் குமார் தெரிவித்துள்ளார்.
முகாம்கள் மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும், அரசாங்கம் அனுமதிக்கும் இடங்களில் இந்தப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் நிமால் குமார் கூறினார்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- வணங்காமண் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசிடம் கையளித்தது
- வணங்காமண் நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்
- சென்னையில் வணங்காமண் கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கம்
மூலம்
[தொகு]- "'வணங்கா மண்' கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்". வீரகேசரி, நவம்பர் 11, 2009