விக்கிசெய்தி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்

விக்கிசெய்தி இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிசெய்திகளில் நிர்வாகியாக்கும்படி (sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். நிர்வாகிகளின் பொறுப்பு என்ன, அவர்கள் என்னதன் செய்வார்கள் என்று அறிய நிர்வாகிகள் பக்கம் சென்று பாக்கவும். ஆங்கில விக்கியில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும். தமிழ் விக்கிசெய்திகளில் நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.

விதிமுறைகள்[தொகு]

பண்புகள்[தொகு]

விக்கிபீடியாவின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிப்பீடியா சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளுக்கு விக்கிபீடியாமீது விசேட அதிகாரமெதுவும் இல்லாவிட்டாலும், பல பயனர்களால், விசேடமாகப் புதியவர்களால் விக்கிபீடியாவின் தொடர்பாளர்களாகப் பார்க்கப்படுவது காரணமாக, ஓரளவு உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும்போது நல்ல மதிப்பிடுதிறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்கவேண்டும். இத்தகைய பண்புகள் நியமனம் செய்யப்படுபவர்களிடம் உள்ளனவா என்று மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அவர்கள் போதிய அளவு காலம் விக்கிபீடியாவில் இருந்திருக்கவேண்டும். பெரும்பாலான புதிய நிர்வாகிகள் மூன்று மாதங்களுக்கு மேல் பங்களிப்புச் செய்தவர்களாயும், 1000 தொகுப்புகளுக்கு மேல் செய்தவர்களாயும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையே நியமித்துக்கொள்ளலாம், ஆனாலும் மேற்சொன்ன எதிர்பார்ப்புக்களை நீங்கள் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.


நியமன முறை[தொகு]

மற்றப் பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை விடப்படும். பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவில்லாதிருப்பின், இக் காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது). போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்துவரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக, முன்னரே நீக்கிவிடலாம், எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிபீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.

உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும். வாக்களிக்கும்போது, தயவுசெய்து நீங்கள் வாக்களிக்கும் நியமனத்தின் மொத்த வாக்குத் தொகையையும் உரியவாறு மாற்றவும். வாக்குத் தொகை மொத்தத்துக்கான குறியீட்டு வடிவம் பின்வருமாறு: (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை).

அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.

படிமுறைகள்[தொகு]

 1. நீங்கள் நியமிக்க விரும்புவர் மேல் குறிப்பிட்டதுக்கு ஏற்ப பொறுப்பு உள்ளதா எனபதை உறுதி செய்யவும்.
 2. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும்.
 3. இங்கு புதிய பகுதி ஒன்றில் அவரது பயனர் பெயரை பிரதியிடவும்.
 4. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும். அதன் கீழ் உங்கள் ஒப்பத்தை இடவும்.
 5. குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந் நியமனத்தை ஏற்றுக்கொண்டால் இப் பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்ளவும்.
 6. திகதியை (00:00:00) இடவும். குறைந்தது ஏழுநாட்களுக்கு வாக்கு நடக்கும்.
 7. விக்கி பயனர்கள் ஆதரவு/எதிப்பு/கருத்து எனது தமது நிலைப்பாடுகளை முன்வைக்க அழைக்கப்படுவார்கள்.
 8. குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கும் பட்சத்தில் அந்தப் பயனர் நிராவாகியாக இருப்பார்.

முந்தைய வேண்டுகோள்கள்[தொகு]

நடப்பு வேண்டுகோள்கள்[தொகு]

செல்வசிவகுருநாதன் வாக்கு: (21|0|0)[தொகு]

செல்வசிவகுருநாதன் 2013 சனவரி முதல் தமிழ் விக்கிசெய்திகளில் பங்களித்து வருகிறார். விக்கிப்பீடியாவிலும் செய்திக் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். விக்கிசெய்தியில் கடந்த சில மாதங்களாக ஒரு தொய்வு நிலை காணப்படுகிறது. செல்வாவிற்கு நிருவாக அணுக்கம் வழங்குவதன் மூலம் இதனை ஈடு செய்யலாம் எனக் கருதுகிறேன். எனது பங்களிப்புகள் தற்போது மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது. இதனால் செல்வாவிற்கு நிருவாகப் பொறுப்பு வழங்குவது தமிழ் விக்கிசெய்திகள் பராமரிப்புக்கு மிகவும் உதவும். செல்வாவை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.--Kanags \பேச்சு 12:11, 27 அக்டோபர் 2015 (UTC)

செய்தித்துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, விக்கிசெய்திகளில் பங்களித்து வந்தேன். கனக்சு அவர்களின் பங்களிப்பு இங்கு குறைந்த நிலையில், நிருவாக அணுக்கம் சம்பந்தப்பட்ட உதவிகளைப் பெற இயலவில்லை. எனக்கு நிருவாக அணுக்கம் இருந்தால், பங்களிப்பினைத் தொடர்வதோடு இன்னமும் சிறப்பாக செயல்பட இயலும் என நம்புகிறேன். தொடர்ந்து நடுநிலைமையுடன் செயல்படுவேன் எனும் உறுதிமொழியினை முன்வைத்து, ஆதரவு கோருகிறேன்; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:29, 27 அக்டோபர் 2015 (UTC)
வாக்கெடுப்பு முடிவுற்றது. வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். செல்வசிவகுருநாதனுக்கு மெட்டாவிக்கி மூலம் நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. செல்வா விக்கிசெய்திகளில் மேலும் சிறப்பாகப் பங்களிக்க அனைவரினதும் சார்பாக என் வாழ்த்துகள்.--Kanags \பேச்சு 22:29, 7 நவம்பர் 2015 (UTC)

ஆதரவு[தொகு]

 1. --நந்தகுமார் (பேச்சு) 12:38, 27 அக்டோபர் 2015 (UTC)
 2. --Booradleyp1 (பேச்சு) 13:52, 27 அக்டோபர் 2015 (UTC)
 3. --Rsmn (பேச்சு) 14:07, 27 அக்டோபர் 2015 (UTC)
 4. --Balurbala (பேச்சு) 16:48, 27 அக்டோபர் 2015 (UTC)
 5. --Natkeeran (பேச்சு) 17:31, 27 அக்டோபர் 2015 (UTC)
 6. --AntanO (பேச்சு) 20:04, 27 அக்டோபர் 2015 (UTC)
 7. --Neechalkaran (பேச்சு) 02:01, 28 அக்டோபர் 2015 (UTC)
 8. --மதனாகரன் (பேச்சு) 03:49, 28 அக்டோபர் 2015 (UTC)
 9. -- மாகிர் (பேச்சு) 05:51, 28 அக்டோபர் 2015 (UTC)
 10. --தகவலுழவன் (பேச்சு) 05:52, 28 அக்டோபர் 2015 (UTC)
 11. --Kanags \பேச்சு 07:05, 28 அக்டோபர் 2015 (UTC)
 12. --Chandravathanaa (பேச்சு) 08:08, 28 அக்டோபர் 2015 (UTC)
 13. சண்முகம்ப7 (பேச்சு) 09:50, 28 அக்டோபர் 2015 (UTC)
 14. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:28, 28 அக்டோபர் 2015 (UTC)
 15. --இரவி (பேச்சு) 14:34, 29 அக்டோபர் 2015 (UTC)
 16. --Sivakosaran (பேச்சு) 14:39, 29 அக்டோபர் 2015 (UTC)
 17. --Kurinjinet (பேச்சு) 00:32, 30 அக்டோபர் 2015 (UTC)
 18. -- இ. மயூரநாதன் (பேச்சு) 13:25, 30 அக்டோபர் 2015 (UTC)
 19. --Aathavan jaffna (பேச்சு)
 20. --Maathavan (பேச்சு)
 21. --Kalaiarasy (பேச்சு) 21:09, 7 நவம்பர் 2015 (UTC)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்து[தொகு]

செல்வசிவகுருநாதன், குறிப்பாக என்ன வகையான பராமரிப்புப் பணிகளில் பங்களிக்க உள்ளீர்கள் என்று விளக்க முடியுமா? தேங்கியுள்ள பராமரிப்புப் பணிகளைச் சுட்டுவதும் உதவும். நன்றி--இரவி (பேச்சு) 12:55, 27 அக்டோபர் 2015 (UTC)

 • என்னுடைய விக்கிசெய்தி அனுபவத்தின்படி, மூன்று வகையான பராமரிப்புப் பணிகளுக்காக நிருவாக அணுக்கம் தேவைப்படும். (1) தீக்குறும்பு எண்ணத்துடனோ அல்லது சோதனை முயற்சியாலோ எழுதப்பட்ட தேவையற்ற கட்டுரைகளை நீக்க. (2) தீக்குறும்பு எண்ணத்துடன் ஆரம்பிக்கப்படும் பயனர் பக்கங்களை அகற்ற. (3) பொருத்தமான தலைப்பிற்கு கட்டுரையினை நகர்த்தியபிறகு, தேவையற்று இருக்கும் வழிமாற்றினை நீக்க.
 • எனது தொகுப்புகளின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில், Editor, Auto review போன்ற அனுமதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், ஒரு கட்டுரையை சரிபார்த்து, பதிப்பிடல் (publish) செய்யும் அனுமதி எனக்கு உள்ளது. முதற்பக்கத்தை இற்றை செய்யவும் ஏற்கனவே எனக்கு அனுமதி உள்ளது. காண்க: பயனர் பேச்சு:Kanags#முதற் பக்க இற்றை. செய்திகளின் உள்ளடக்கத்தை எல்லோரையும் போன்று திருத்தவும் இயலும். எனவே முழுமையான நிருவாக அணுக்கம் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பங்களிக்க இயலும். நிருவாக அணுக்கம் தொடர்பான உதவிக்கு, விக்கிப்பீடியாவில் சிறீதரன் அவர்களின் பேச்சுப் பக்கத்தில் கேட்க வேண்டும் என்பது ஒரு குறை.
 • பொருத்தமான தலைப்பிற்கு கட்டுரையினை நகர்த்தியபிறகு, வழிமாற்றிகளை இங்கு விட்டுவைப்பது விக்கிசெய்தித் தளத்தில் தேவையற்றது. வழிமாற்றிகளை நீக்குமாறு பலமுறை சிறீதரன் அவர்களின் உதவியினை இங்கு நாடியுள்ளேன். காண்க: பயனர் பேச்சு:Kanags#தேவையற்ற பக்கம்
 • [1] என்பது போன்ற கட்டுரைகள், பதிப்பிக்கப்படவில்லை என்றாலும், அண்மைய மாற்றங்களில் தெரியவருவது நல்லதல்ல எனத் தோன்றியது. எனவே நிருவாக அணுக்கம் பெற்றுத்தர பரிந்துரைக்குமாறு நேற்று சிறீதரன் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். நிருவாக அணுக்கம் தொடர்பாக அவர் முன்பு என்னை அணுகியதை இங்கு காணலாம்: பயனர் பேச்சு:Selvasivagurunathan m#நிருவாக அணுக்கம்
 • தங்களின் கேள்வி, இங்கு என்னை புதுப்பித்துக்கொள்ள (refresh) உதவியுள்ளது; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:31, 27 அக்டோபர் 2015 (UTC)
செல்வசிவகுருநாதன், விவரங்களுக்கு நன்றி. ஆதரவு அளிக்கிறேன். --இரவி (பேச்சு) 14:34, 29 அக்டோபர் 2015 (UTC)

வாழ்த்துகள்[தொகு]

செல்வசிவகுருநாதனுக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. செல்வா விக்கிசெய்திகளில் மேலும் சிறப்பாகப் பங்களிக்க அனைவரினதும் சார்பாக என் வாழ்த்துகள்.--Kanags \பேச்சு 22:26, 7 நவம்பர் 2015 (UTC)

நன்றி[தொகு]

வாக்களித்து ஆதரவு தந்தோருக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்; என் மீதான தங்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெருமைபடுத்துவேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:19, 8 நவம்பர் 2015 (UTC)